கோவையில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையன் கைது: 24-பவுன் பறிமுதல்.!!

கோவை: வீடுகளை நோட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டு 24 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: வீடுகளை நோட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டு 24 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட பகுதிகளில் தொடர்ந்து பகல் நேரங்களில் திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இதனைத் தடுக்கும் பொருட்டு டிஐஜி முத்துச்சாமி உத்தரவின் பேரில் எஸ்.பி.செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.ஜெயசிங் நேரடி பார்வையில் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் செல்வ நாயகம், தாமோதரன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் பாரதி நகர்ப் பகுதியில் கத்தியைக் காட்டி மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணம் பறித்துச் சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் அன்னூர் சாலையில் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அவ்வழியாக பல்சர் பைக்கில் வந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 28) என்பதும், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து பீரோவில் உள்ள நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது.

மேலும், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் காவல் நிலையங்களில் இவன் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குறுகிய காலத்தில் பணம் சேர்த்து பெரிய ஹோட்டலுக்கு உரிமையாளராக வேண்டும் எனக் கூறியதாகவும் தெரியவந்தது.



இதனையடுத்து, அவனைக் கைது செய்த காவல்துறை அவனிடமிருந்து 24 சவரன் தங்க நகைகள், ரூ.1000, கத்தி மற்றும் பல்சர் பைக்கினையும் பறிமுதல் செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் கூறுகையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், வீடுகளில் சி.சி.டி.வி கேமராக்களை வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...