கோவையில் இறந்தவர் பெயரிலேயே மீட்டர் பெட்டி இடமாற்றம் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு மனு.!!

கோவை :கோவை பீளமேடு பகுதியில் இறந்தவா் பெயரில் மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் இறந்தவா் பெயரில் மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகர் வட்டம், பீளமேடு கிழக்குப் பிரிவு மின் அலுவலக பகுதியான துளசியம்மாள் லேஅவுட்டில் சரஸ்வதி என்பவர் பெயரில் வீட்டு மின் இணைப்பு இருந்து வந்தது.

இதன் மின் இணைப்புப் பெட்டியை, கிழக்குப் பிரிவு மின்வாரிய அலுவலர்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்தனர்.

இதில், சரஸ்வதி என்ற பயனாளி இறந்துவிட்ட நிலையில், அவரின் வாரிசுதாரா்கள் ஒப்புதலோடு விண்ணப்பம் பெற்று, மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்த பின்பு மின் பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், இறந்தவர் பெயரிலேயே விண்ணப்பம் பெற்று மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளனர். இது மின் வாரிய ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது. இவ்வாறு, இறந்தவர் பெயரில் விண்ணப்பம் பெற்று மின் பெட்டி இடமாற்றம் செய்த சம்பந்தப்பட்ட மின் அலுவலர்கள் மீது தலைமைப் பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சமீபத்தில் கோவை நகர் கோட்டத்துக்கு உள்பட்ட பீளமேடு நகரம், கிழக்குப் பிரிவு தண்ணீர்ப் பந்தல், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்குத் தெரிந்தே விதிமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...