திருப்பூர்: திருப்பூரில் கொரோனா மையங்களாக இருந்த பள்ளிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு, ஆன்லைன் மூலமே தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதையொட்டி, தமிழக அரசு பள்ளிகளை நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க உத்தரவிட்டதோடு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல, மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோன மையங்களாக அமைக்கப்பட்ட ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி, சிக்கண்ண அரசு கல்லூரி, அனுப்புர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கொரோனா மையங்கள் அகற்றப்பட்டு, அங்கு போடப்பட்டுள்ள படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் 36 வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டது. அந்த வகுப்பறைகள் அனைத்தும் தற்போது சுத்தம் செய்து வருகின்றனர். அங்கு போடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட படுக்கைகளை அகற்றி, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர்.