திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த 3 வங்கதேச இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வடக்கு காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் குமரானந்தபுரம், அண்ணா வீதியை சேர்ந்த 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் அல்அமின் (28), ரோகிம் மியா (22), எம்.டி. ரியாது மோனி (21) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் வங்கதேசத்திலிருந்து, மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது.
பின்னர், குமரானந்தபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வடக்கு போலீசார் 3 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.