கோவை: கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவக்கி வைத்தார். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய அலுவலகக் கட்டிடம் ரூ. 2.16 கோடி மதிப்பில் கோவை ஜி.பி சிக்னல் அருகே கட்டப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்து இருந்தது.
இந்த நிலையில், இன்று 10.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, கள்ளநோட்டு தடுப்பு பிரிவு, உட்பட 3 பிரிவுகள் செயல்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சிபிசிஐடி டி.எஸ்.பி, கள் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.