கோவை: கோவையில் காட்மா சங்கம் சார்பாக 500 குறுந்தொழில் முனைவோருக்கு கொரோனா தடுப்பு ஊசி முகாமில் 500-பேருக்குச் செலுத்தப்பட்டது.

கோவையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகின்றன.

இன்று கோவை காட்மா சங்கம், மாவட்ட தொழில் மையம், சுகாதாரத் துறை இணைந்து கோவை மணிகாரம்பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் வைத்து 500 குறுந்தொழில் முனைவோருக்குத் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டது.
இதில் ஆண்கள் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் உட்படப் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு காட்மா சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காட்மா சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ், இணைத் தலைவர் ஜெ.மகேஷ்வரன், துணைத் தலைவர் ஜெ.புவியரசு, துணைத் தலைவர் ஆர்.சோமசுந்தரம், செயலாளர் வி.சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காட்மா சங்களின் செயலாளர்கள் டி.சக்திவேல், எம்.ராதாகிருஷ்ணன். பி.சரவண சுந்தரம், பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கொரோனா இலவச தடுப்பூசியைக் கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தின் உரிமையாளர் மணி கவுண்டர் துவக்கி வைத்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கார்த்திகை வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
காட்மாசங்கம் சார்பாகத் தொடர்ந்து குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்களுக்காகத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது 9-வது தடுப்பூசி முகமாகும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களுக்குக் குடிதண்ணீர், பிஸ்கட் பழங்கள் அனைத்தும் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டு அவர்கள் வீட்டில் கொண்டு விடப்பட்டன.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சிவக்குமார் நம்மிடம் கூறும்போது: -
தமிழக அரசினுடைய வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறை உடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து முகாம்களை நடத்தி தொழிலாளர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.
இப்பொழுது மக்களுக்குத் தடுப்பூசி குறித்த அச்சம் இல்லாமல் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.
இதில் காட்மா சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட குடும்பத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சரவணகுமார் நன்றியுரை வழங்கினார். அப்பொழுது மிகவும் உறுதுணையாக இருந்து வழிகாட்டிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் சுகாதாரத் துறை, அவரே மாவட்ட தொழில் மையம் ஆகிய அதிகாரிகளுக்குக் காட்டுமா சார்பாக நன்றி கூறப்பட்டது.