அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதற்கு கண்டனம்..! கோவையின் முக்கிய இடங்களில் அதிமுகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு!

கோவை: அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோவையின் முக்கிய இடங்களில் அதிமுகவிற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோவையின் முக்கிய இடங்களில் அதிமுகவிற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட இன்னும் சில பொறுப்புகளில் புகழேந்தி செயல்பட்டு வந்த நிலையில்,அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புகழேந்தி கட்சியில் இருந்து நிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.



இந்நிலையில், தற்போது புகழேந்தி நீக்கப்பட்டதைக் கண்டித்து உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் சாலை, டவுன் ஹால், உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



அப்போஸ்டரில் அதிமுகவை கண்டிக்கும் வண்ணம் "புரட்சித்தலைவி அம்மாவிற்கு ஜாமீன் வழங்கிய அஞ்சாநெஞ்சன் புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம்"

அனாதை கட்சியா அஇஅண்ணா திமுக, கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தி பேசுவதா, இதனை கண்டித்தால் கட்சியில் இருந்து நீக்குவதா, மானமிகு தொண்டர்களே இந்த தலைமை தேவையா.? கோவை கழக உண்மை விசுவாசிகள்.



இவ்வாறு இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...