கோவை: கோவை அருகே நள்ளிரவில் நண்பர்களைப் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை அருகே நள்ளிரவில் நண்பர்களைப் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிய வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மதுக்கரையை அடுத்த போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரமேஷ் (23). இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் சி.என்.சி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இரவு வெளியே சென்ற ரமேஷ் நண்பர்களைப் பார்த்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பாலக்காடு எல்.என்.டி பைபாஸ் வழியாக வீட்டுக்குச் சென்றதாகத் தெரிகிறது.
அப்போது, போடிபாளையம் அருகே வந்த போது அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் ரமேஷின் கழுத்து, வயிறு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீசார், ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.