மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீர் வெள்ளப்பெருக்கு; 4 பேர் பத்திரமாக மீட்பு..!

கோவை: கோவை அருகே பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உயிருக்குப் போராடிய 4 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை: கோவை அருகே பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உயிருக்குப் போராடிய 4 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, மின் உற்பத்திக்காக பில்லூர் அணையிலிருந்து அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேர் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஆற்றின் நடுவே உள்ள திட்டில் ஏறி நின்று கொண்டனர்.

பின்னர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வெள்ளத்தில் இருந்து தப்பிக்க திட்டில் ஏறி நின்று கொண்டிருந்தவர்களை கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

தீயணைப்புத்துறையினரின் விசாரணையில் மதுரையை சேர்ந்த சுந்தரமூர்த்தி (35), அழகர் (32), சக்திவேல் (27), பகவதி (37) என்பதும், மேட்டுப்பாளையத்தில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்ததும், ஞாயிறு விடுமுறை என்பதால் பவானியாற்றிற்கு குளிக்க வந்ததும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானியாற்றில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வது வாடிக்கையாக உள்ளதால் இதனை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...