கோவை: கோவையில் கம்பினை அதிகம் பயிரிடுவதின் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்மை திட்ட இயக்குநர் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:
வீரியம், ஒட்டு போன்ற பல்வேறு ரகங்களில் கம்பு பயிர்சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடை முறையில் உள்ளது.
ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீட்டர் இடைவெளியும் விட வேண்டும். மானாவாரியில் 12.5 டன், (ஒரு ஏக்டருக்கு), தழைச்சத்து 70 கிலோ, மணிச்சத்து 20 கிலோ அனைத்தும் அடியுரமாக இட வேண்டும். கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மேலும், ஒருங்கிணைந்த பயிர் நோய் மற்றும் பூச்சி பாதுகாப்பு முறையில் குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை கம்பு தரும். தானியங்கள் கடினமாகும்.
அப்போது, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். இது போன்ற சில முறைகளில் கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம். இவ்வாறு சித்ராதேவி கூறினார்.