கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை விரைந்து வழங்குங்கள்: தமிழக முதல்வருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கடிதம்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை விரைந்து வழங்குங்கள்: தமிழக முதல்வருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கடிதம்


கோவை:விமான நிலையங்களில் ஓடுபாதை விரிவாக்கம், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தடைப்பட, அந்தந்த மாநில அரசு சார்பில் நிலங்களை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க ஆகும் காலதாமதமே முக்கிய காரணமாக என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்க முதல்வர்களுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய.எம். சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். அதில், மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், மாநில அரசு சார்பில் நிலங்களை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க மிகுந்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், விமான நிலையங்களில் ஓடுபாதை விரிவாக்கம், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன எனவும் இதை கருத்தில் கொண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கும் போது, அவற்றுக்கு உதவும் வகையில் லைடிங் சிஸ்டம் கூடுதலாக அமைக்க 93.04 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், 5 ஏக்கர் மட்டுமே விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே போல், கோவை விமான நிலையத்தில் ஓடுபாதை நீளத்தை அதிகரிக்கவும,புறப்பாடுக்கான புதிய டர்மினல் பில்டிங் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் 627.89 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இது தவிர மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் விமான நிலையங்களை மேம்படுத்தவும் நிலங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளது குறித்தும், தஞ்சாவூரில் தற்போது இந்திய விமான படை சார்பில் செயல்பட்டு வரும் விமான நிலைய வளாகத்தில் புதிதாக பயணிகள் விமான நிலையம் அமைக்க நிலம் தேவைப்படுவது குறித்தும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேல் தமிழக அரசு சார்பில், மண்டல விமான கனெக்டிவிட்டி நிதி அறக்கட்டளைக்கு (VGF Share for Regional Air Connectivity Fund Trust RACFT) செலுத்தவேண்டிய தொகை Rs, 1.92 கோடி நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேலே குறிப்பிட்ட விமான நிலையங்களில் வளர்ச்சி பணிக்கு தேவையான நிலங்களை விரைவாக ஆர்ஜிதம் செய்து இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கவேண்டுமென மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் தமிழக அரசு நிலத்தை ஆர்ஜிதம் செய்து தராத காரணத்தால் இன்றுவரை வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் தடைபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், புத்துயிர் பெற்றுள்ளது.



மாவட்ட கலெக்டர், விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு கூட்டங்கள், கள ஆய்வு உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழலில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், தமிழக முதல்வரிடம் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை விரைந்து ஒதுக்கீடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது விமான பயணிகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...