கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - கலெக்டர் தகவல்

கோவை: வரும் நாட்களில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வாளையார் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட கலெக்டர், ஜி.எஸ். சமீரன், வரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று விகிதம் சற்று உயரந்துள்ளது. தொற்று அதிகமாகாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவையில் நடைமுறையில் இருந்த கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தி உள்ள நிலையில், வரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள சூழ்நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட பாலக்காடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால், இரண்டாவது தவணை இங்கு கல்லூரிகளில் போடுவதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில், இது வரை 22.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இதில் 71 சதவீதம் அரசு சார்பிலும், 1.69 லட்சம் தனியார் மருத்துவமனைகள் சார்பிலும், 2.16 லட்சம் தடுப்பூசிகள் தொழிற்சாலைகள் மூலமும், 18 ஆயிரம் தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களில் சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடனும் போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் இன்னும் கூடுதலான தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்தி அதிகளவிலான நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் வழங்கப்படும். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும், சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் வரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...