கோவை: கோவை கிணத்துக்கடவில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கிணத்துக்கடவு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கோவை - பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு, பழைய பஸ் நிறுத்தம், கிணத்துக்கடவு பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையை கண்காணித்தபோது, அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து பெட்டிக்கடையை நடத்தி வரும் கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (55) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.