கோவை கிணத்துக்கடவு அருகே சொத்து பிரச்சனையால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்குபதிவு!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சொத்து பிரச்சனையால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சொத்து பிரச்சனையால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி லோகநாயகி (54).

இந்த நிலையில், நேற்று லோகநாயகி தனது கணவர் சின்னத்துரைக்கு அனுபவத்தில் உள்ள நிலத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வடக்கிபாளையம் அருகே உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன் புதூரைச் சேர்ந்த கதிர்வேல் ஆகிய இருவரும் லோகநாயகியை தேங்காய் பறிக்க கூடாது என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், இதுகுறித்து லோகநாயகி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் நாகூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன் புதூரைச் சேர்ந்த கதிர்வேல் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...