பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி குறைந்த எண்ணிக்கையை கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல்நிலைய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்த நிலையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி கோவை அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் முரளி, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பார் ஊழியரான சுரேஷ் என்பவரை பிடித்ததுடன் அவரிடமிருந்து சுமார் 1400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் 192 மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். 

இந்நிலையில், 1200 மது பாட்டில்களை ஆய்வாளர் பதுக்கியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு புகார் வந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிப்படவே அவரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒருவார காலமாக இது தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்காத பீளமேடு காவல்நிலைய உளவு பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...