கோவை புறநகர் பகுதியில் 3 வீடுகளில் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை புறநகர் பகுதியில் 3 வீடுகளில் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி வயது 49. இவர் அந்த பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான வெள்ளை கோவிலுக்குச் சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையில் உள்ள பீரோவைத் திறந்து, அதில் இருந்த வளையல், செயின், கம்மல், மோதிரம், உட்பட 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராமமூர்த்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் சகிதமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அதே போல், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளி பாளையத்தை சேர்ந்தவர் வினோத் குமார் 31, ஐ.டி ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 6.5 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றன.
வீட்டிற்கு திரும்பிய விக்னேஷ் குமார் வீட்டில் நகைகள் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களாமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மனைவி சரஸ்வதி 44, கூலி தொழிலாளி.நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்ற போது, இரவு வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ஒன்றரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
துகுறித்து சரஸ்வதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மூன்று கொள்ளை சம்பவங்களும் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.