கோவை: வால்பாறை தெப்பக்குளம் மேடு பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஆதிவாசி மக்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 11 ஆதிவாசி பழங்குடியினர் கிராம மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஆதிவாசி பழங்குடியினர் கிராமத்தில் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு வசித்து வந்த 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அங்கு வாழ முடியாமலும், அதிக கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் மேல் மண் சரிந்து விழும் என்று எண்ணி வால்பாறை வட்டாட்சியர் அவரிடம் வன பகுதியில் உள்ள நிலையை மனுவாக வழங்கினார்.

அதேபோல, மீண்டும் அதிக மழை பெய்து வந்ததால் வன பகுதியிலே பாதுகாப்பாக இருக்க குடிசை அமைத்தனர். வனத்துறை சட்டத்தின் படி மாற்று இடம் வழங்க தேசிய புலிகள் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றும் வன துறையினர் கல்லார் ஆதிவாசி மக்கள் தற்காலிகமாக அமைத்த குடிசையை அப்புறப்படுத்தினர்.
பின்னர் மாவட்டம் மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர், மற்றும் சார் ஆட்சியர் தலைமையில் கல்லார் செட்டில்மெண்டு மக்களுக்கு தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் தேர்வு செய்து, இடம் அளந்து அதை தேசிய புலிகள் காப்பகம் ஆணையத்திற்கு அனுப்பி பதில் தருவதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே, கல்லார் சேட்டில் மேடு பகுதியில் அதிக மண் சரிந்து வருவதாகவும் அங்கு வாழ முடியாது என்றும் மக்கள் தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் தாய் முடி எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி காலியாக உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தற்காலிகமாக ஆதிவாசி மக்களை தங்க வைத்தனர்.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், பொள்ளாச்சி சப்-கலெக்டர் நில அளவை செய்து, அதன் விவரங்களை தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை.
இந்த நிலையில், ஆதிவாசி கிராம மக்கள் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில், நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக எங்களது பூமியை விட்டு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களது கலாச்சார முறைகளை பின்பற்ற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் எங்களது குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவுப் பழக்கங்களும் மாறுபட்டு வருகிறது.
இதனால் எங்களது சந்ததிகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகி உள்ளது. மேலும் கொரோனா நோய்கள் பரவக் கூடிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, தேசிய புலிகள் ஆணையத்தின் உத்தரவை விரைவாக பெற்று தெப்பகுளம் மேடு பகுதியில் பாரம்பரிய முறையை திருப்பி தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.