திருப்பூர்: மலைவாழ் மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இன்று இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மலைவாழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்காக நடத்தப்பட்டது.
இவர்களது சட்ட ரீதியான பிரச்சனை மற்றும் வாழ்வியல் சூழல் பிரச்சினை போன்றவைகளில் இருந்து அவர்களை மீட்க இந்த முகாம் நடைபெற்றது. குறிப்பாக மலைவாழ் மக்கள் பலர் பெண் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதுபோன்ற பிரச்சினையிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த முகாமின் நோக்கம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.

பல மலைவாழ் மக்கள் இன்னமும் குடும்ப அட்டை மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த முகாம் மூலம் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டது.
மிகவும் ஏழ்மையாக உள்ள சில குடும்பத்திற்குக் கொரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் j.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி சார்பு நீதிபதி மணிகண்டன் மற்றும் சார்பு நீதிபதி பிரஷ்னேவ் அவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். மேலும் வருவாய்த்துறை, வனத்துறை, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.