மூலப்பொருட்கள் விலை ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு: இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பவுண்டரி தொழில்துறையினர் கோரிக்கை

மூலப்பொருட்கள் விலை ஓராண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜாப் ஆர்டர் நன்றாக உள்ள போதிலும் நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.



மூலப்பொருட்கள் விலை ஓராண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜாப் ஆர்டர் நன்றாக உள்ள போதிலும் நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கோவை: கடந்த ஓராண்டில் மட்டும் மூலப் பொருட்களின் விலை 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதால் பவுண்டரி தொழிற்சாலைகளில் காஸ்டிங் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தீர்வு காண இரும்புத்தாது ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க பவுண்டரி தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுண்டரி தொழிற்சாலைகளின் பங்களிப்பு

உற்பத்தித்துறை தொழில் நிறுவனங்களின் தாயாக கருதப்படுகிறது பவுண்டரி தொழிற்சாலைகள் (Mother of All Industries). பெரும்பாலான அனைத்து பொருட்கள் உற்பத்தியில் காஸ்டிங் முக்கிய மூலப்பொருளாக பயன்படுவதே, இதற்கு காரணமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பவுண்டரி தொழிற்சாலைகள், கடந்த ஓராண்டாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கோவை பவுண்டரி தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகள்

கோவை மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, காஸ்டிங் ஆர்டர்கள் அதிகம் உள்ள போதிலும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து, இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்(IIF), கோவை கிளைத் தலைவர், பால்ராஜ் கூறியதாவது: மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வு தான் பவுண்டரி தொழிற்சாலைகள் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையாகும். முக்கிய மூலப் பொருட்களான pig iron, ஸ்கிராப் (scrap) உள்ளிட்டவற்றின் விலை, கடந்த ஜூலை 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை 2021 வரை ஒப்பிடுகையில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால், ஜாப் ஆர்டர் நன்றாக உள்ள போதிலும் நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் பவுண்டரி தொழிற்சாலைகள் அனைத்தும் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை (No Profit, No Loss) என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகின்றன. இது தொழில் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

என்ன தீர்வு..?

பவுண்டரி தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக இரும்புத்தாது (Iron Ore) ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உடனடியாக பவுண்டரி தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த மூலப்பொருட்கள் விலை குறைந்துவிடும். பிரச்சனைக்கு இது ஒன்றுதான் தீர்வு.

எனவே, எங்கள் சங்கம் சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். நடவடிக்கை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...