தென் தமிழகத்தில் முதல் முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘தாய்ப்பால் வங்கி’ தொடக்கம்.!!

கோவை: தென் தமிழகத்தில் முதல் முறையாகக் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று (28.08.2021) ‘தாய்ப்பால் வங்கி’ தொடங்கப்பட்டது.


கோவை: தென் தமிழகத்தில் முதல் முறையாகக் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று (28.08.2021) ‘தாய்ப்பால் வங்கி’ தொடங்கப்பட்டது.

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ஆவாரம் பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் காட்டன் சிட்டி இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கியுள்ளது. ‘Nectar Of Life’ என்பது இதன் மையக்கருவாகும்.



இதன் தொடக்கவிழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். 3201 ரோட்டரி மாவட்ட கவர்னர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தாய்ப்பால் வங்கியைத் திறந்து வைத்தார்.

தொடக்க விழாவில் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் காட்டன் சிட்டி தலைவர் டாக்டர் நீதிகா பிரபு, இணைத் தலைவர் ராகேஷ்குமார் ரங்கா, தலைவர் அஜய்குமார் குப்தா, சமூகச் சேவை இயக்குநர் தருண்குமார் ரங்கா, செயலாளர் குமார்பால் டாகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமைச் செயல் அதிகாரி ஸ்வாதி ரோஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைச் செயல் அலுவலர் சி.வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனியார்த் துறைகளில் தென் தமிழகத்தில் முதல் முறையாகவும், தமிழகத்தில் இரண்டாவது முறையாகவும் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கருவிகள் சர்வதேச ரோட்டரியின் உதவியுடன் கோவை ரோட்டரி காட்டன் சிட்டியால் தருவிக்கப்பட்டுள்ளது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தேவைப்படும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் இலவசமாக வழங்கப்படும்.

தரமான தாய்ப்பாலுக்காக நுண்ணுயிரியல் மற்றும் அதி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் தானம் வழங்க முன்வரும் தாய்மார்களுக்குச் சிறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தாய்ப்பால் பெற்றுக் கொள்ளப்படும்.

பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கு, இந்த தாய்ப்பால் வங்கி வரப்பிரசாதமாக விளங்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்தியேக பகுதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் வங்கியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...