கோவை: கோவை கீரநத்தம் பகுதியில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை கீரநத்தம் பகுதியில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு, உடந்தையாக இருந்த எஸ்.ஐ இருளப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டார். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் ன்பவர், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி கட்டிட பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கோவை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் மேற்கண்ட வியாபாரியை அணுகி மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்தை லஞ்சமாக தர வேண்டும் இல்லாவிட்டால் கைது செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து, ஐயப்பன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் 2 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கீரணத்தம் பகுதியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த தலைமை காவலர் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது பணத்தை வாங்கிய போது, மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ராஜ்குமாரை கையும்களவுமாக பிடித்தனர். பின்னர், அவரது அலுவலகத்திலும் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதனிடையே, தலைமை காவலருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக எஸ்.ஐ இருளப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரையும் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், பிறகு இன்று மதியம் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.