அரசு ஊழியர்கள், உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க முன்வர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை: கோவை உழவர் சந்தையில் காய்கறி வாங்கி, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்' என்று மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவை உழவர் சந்தையில் காய்கறி வாங்கி, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்' என்று மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன.இங்கு விவசாயிகளின் வருகை மற்றும் காய்கறி விற்பனையை ஊக்குவிக்க, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அவற்றின் சார்பு நிறுவனங்கள், அவற்றின் சார்பு உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், உழவர் சந்தைகளில் காய்கறி வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் கீரைகள், காய்கறிகளை நேரடியாக வாங்குவதன் மூலம் விவசாயிகள், நுகர்வோர் என, இரு தரப்பினருக்கும் பயன் கிடைக்கும்.

உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், அந்தந்த உழவர் சந்தையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...