கொலை வழக்கு குற்றவாளி கோவை கோர்ட்டில் ஆஜராக வந்த போது குற்றவாளிக்கு கோர்ட்டு வாசலில் கத்திகுத்து.!! காவல்துறை விசாரணை.!!

கோவை: கொலை வழக்கு குற்றவாளி கோவை கோர்ட்டில் ஆஜராக வந்த போது குற்றவாளிக்கு கோர்ட்டு வாசலில் மர்ம நபர்கள் சேர்ந்து சரமாரியாகக் கத்தியால் குத்தினர்.


கோவை: கொலை வழக்கு குற்றவாளி கோவை கோர்ட்டில் ஆஜராக வந்த போது குற்றவாளிக்கு கோர்ட்டு வாசலில் மர்ம நபர்கள் சேர்ந்து சரமாரியாகக் கத்தியால் குத்தினர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியான நபர் குண்டுவெடிப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்திருந்தார். பிறகு அவர் புறப்பட்டபோது குண்டுவெடிப்பு நீதிமன்றத்திற்கு வெளியே 3-மர்ம நபர்கள் சேர்ந்து சரமாரியாகக் கத்தியால் குத்தினர். அதனால் கோர்ட்டு நடந்து கொண்டிருந்தபோது அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டு அனேகர் ஓடி வந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்து விழுந்தது அரசு மருத்துவச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கடந்த 2020 ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகறாரில் வினோத்குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு

கோவைக் குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான விஜயகுமார் மற்றும் மூன்றாவது குற்றவாளியான ஹரிஹரன் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளியையும் தேடி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...