கோவையில் வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் 277-பேர் பங்கேற்பு.!!

கோவை: கோவை வீட்டு வசதி வாரியம் மூலமாக மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை வீட்டு வசதி வாரியம் மூலமாக மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஒதுக்கீடு தாரர்களுக்குக் கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முழுத் தொகை செலுத்தியவர்களும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாதவர்கள் முழுத் தொகை செலுத்தியும் விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் 277-பேர் பங்கேற்றனர்.

இதில் 108-பேருக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன், மேலாளர் விற்பனை மற்றும் சேவை அருண், சேலம் சரக மேற்பார்வை பொறியாளர் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...