வால்பாறை: வால்பாறையில் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியை நகராட்சி மேற்கொண்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதியில் தினந்தோறும் பல டன் குப்பைக் கழிவுகள் நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் ஸ்டான் மோர் சாலை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக நகராட்சிக் குப்பைக் கிடங்கில் வால்பாறை நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டக் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வால்பாறை நகரில் சேகரமாகும் பல டன் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சாலையின் ஓரத்திலேயே கொட்டி வந்தனர்.
இதன்காரணமாக ஸ்டான்மோர் குரங்கு முடி, பழைய வால்பாறை, வரட்டுபாறை, உருளிக்கல் மற்றும் சோலையார் அணை கேரள பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் இங்கு கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு அருகிலுள்ள வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி நீதிமன்றம் வருபவர்களுக்கும் மேலும் அருகில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் கக்கன் காலனி பகுதியில் குடியிருக்கும் மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதனை முன்னிட்டு நகராட்சிக்குப் பலமுறை சாலையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் ஸ்டான்மோர் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டது. மேலும் மாமிசக் கழிவுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஆணையாளர் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.