கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை.!! வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!!

கோவை: கள்ளக்காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்குக் கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


கோவை: கள்ளக்காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்குக் கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பின் விவரம் வருமாறு:-

2015-ஆம் ஆண்டு கோவை மாவட்டம்,மாதம் பட்டியைச் சேர்ந்த சித்ரா என்கிற கல்பனா என்பவருக்கும் ஜான்பீட்டர் என்பவருக்கும் கடந்த 18-வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர்கள் கடந்த 10-வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சித்ரா கோவைசுங்கம் பகுதியில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்கனவே திருமணம் ஆன நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்சித்ரா, நாகராஜை தன்னுடனே வாழ வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு நாகராஜ் மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஆத்திரம் அடைந்த நாகராஜ் கடந்த 26/10/2015 அன்று சித்ராவைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு மாதம் பட்டி லக்ஷ்மி கார்டன் அருகில் வைத்து சேலையால் சித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து நாகராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தார். கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று இன்று வழக்கின் விசாரணை முடிவு பெற்றது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் சிறந்த முறையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றத்தில் சாட்சிகளைச் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக்காவலர் சண்முகம் அவர்களைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செல்வ நாகரத்தினம் அவர்கள் பாராட்டினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...