கோவை: கோவை மாவட்ட அரிமா சங்கம் சார்பாகக் கோவை முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட அரிமா சங்கம் சார்பாகக் கோவை முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட அரிமா சங்க பதவியேற்பு விழா கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள லிண்டா மஹாலில் நடைபெற்றது. இதில் 2021-அரிமா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமா மாவட்ட ஆளுநர் குப்புசாமி தலைமை தாங்கினார்.
இதில் ப்ளூம் 2021-22 ஆண்டு புதிய நிர்வாகிகள் 324-பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கோவை முத்தூர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவண குமார் அவர்களுக்கு ஆளுநர் குப்புசாமி அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தார். இதில் அரிமா குடும்பத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.