கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை நகரில் பல்வேறு இடங்களில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போனதை தொடர்ந்து காட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், கிராஸ்கட் ரோட்டில் ஸ்கூட்டரை திருடியதாக 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் ஊட்டியை சேர்ந்த விஜய் டேனியல் (35), துடியலூரைச் சேர்ந்த சதீஷ் (40), ராகேஷ் (23) ஆகிய 3 பேரும் ஆர்.எஸ்.புரம், துடியலூர், நீலகிரி, ஊட்டி உட்பட பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 மோட்டார் சைக்கிள் இரண்டு ஸ்கூட்டர்களை போலீசார் மீட்டனர். கைதான விஜய் டேனியல் ஏற்கனவே இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர். மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.