கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில், அம்மன் கண் திறந்தாக கூறி அலைமோதிய கூட்டம்.
கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இன்று அம்மனுக்கு சர்வ அலங்காரத்துடன் பூஜை நடைபெற்று கொண்டிருந்த போது, பக்தர் ஒருவர் அம்மனுடைய வலது கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அம்மன் கண் திறந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், உடனடியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ளஉஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.
பக்தர்கள் ஆர்வத்துடன் அம்மனை பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுடைய கூட்டத்தை கட்டுப்படுத்த அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.