கோவை: கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடத்தப்பட்டது.
காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன்வழங்கினார்.

கோவை மாவட்ட நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் காது கேட்காத, வாய் பேச முடியாத நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்தனர். இந்த முகாமில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனியார் நிறுவனங்களில் பணிக்குத் தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், தன்னார்வ அமைப்புடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாகவும், இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் 25-பேருக்கு வேலைவாய்ப்பு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், மாலை வரை நடைபெறும் இந்த முகாமில் 50-பேர் வரை வேலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நிரந்தரமாகமையம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களுக்கு இதில் வேலை கிடைத்து இருப்பதன் மூலம் வருவாய் ஈட்ட வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும், கொரோனா காரணமாக வீட்டிலேயே மாற்றுத் திறனாளிகள் முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு கிடைத்து இருப்பதன் மூலம் குடும்ப பிரச்சனைகளை தங்களால் சமாளிக்க இயலும் எனவும் மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.