கோவை: கோவையில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி கிருஷ்ண நந்தாவின் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி கிருஷ்ண நந்தாவின் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பி கிருஷ்ண நந்தா (46). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பொதுமக்களை அச்சுறுத்தி வந்த போது, அவர் பணியாற்றிய சிறப்பு மருத்துவமனையில் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற பெரும் உதவிபுரிந்தார்.
இந்நிலையில், குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் அவர் சென்னையில் தங்கியிருந்த போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யத் தயாராக இருந்த டாக்டர் கிருஷ்ண நந்தாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனை நிபுணர்கள் குழு அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்தது. ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர் கிருஷ்ண நந்தா வியாழக்கிழமை மாலையில் பல உறுப்பு செயலிழப்பு அடைந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காலங்களில் பொதுமக்கள் பலரின் உயிரை காப்பாற்றிய அவரின் உயிரிழப்பு செய்தி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.