இந்திய தயாரிப்பில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கிளை பொள்ளாச்சியில் தொடக்கம்.!!

கோவை: இந்தியத் தயாரிப்பில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கிளை பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.


கோவை: இந்தியத் தயாரிப்பில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கிளை பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வி.விடியன் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.



பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில், விவிடியன் என்ற தனியார் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.



விழாவில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இயக்குநர் மாணிக்கம் மற்றும் தனியார் நிறுவனத்தின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவின் போது, நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்த பேட்டியின் போது, விவிடியன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லி குர்கானில் அமைந்துள்ளது.



இந்த நிறுவனம் சிசிடிவி கேமரா, டேட்டா நெட்வொர்க்கிங் ரவுட்டர் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில், தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் கிளையில், 300-க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கேமரா, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்புக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்கள் சீன நிறுவனங்களிடம் பெறப்பட்டுத் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது இந்தியா முழுவதும் இந்தியத் தயாரிப்பில் உருவாகும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்து, சந்தைப் படுத்தி வருவதாகவும், மேலும் நமது நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகும்.



அனைத்து விதமான எலக்ட்ரானிக் பொருட்களும் இந்திய தயாரிப்பில் உருவாக்கி சந்தை படுத்துவதின் மூலம் தமிழகத்தில் உள்ள பொறியியல், டிப்ளமோ பயின்ற மாணவ மாணவிகளுக்கு இங்கேயே வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், குறிப்பாகக் கிராமப் புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...