கோவை: வால்பாறையில் பழங்குடி மக்கள் கிராமத்தில் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
கோவை: வால்பாறையில் பழங்குடி மக்கள் கிராமத்தில் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்கள் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட் வனப்பகுதியில் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் பகுதி உள்ளது இங்கு 160 பேர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
75வது சுதந்திர தினத்தை 90 வயதான கணேசன் முன்னாள் மூப்பன் கொடியேற்றி வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். ஆங்கிலேயர் காலத்திலிருந்த வனப்பகுதியில் ஆதிவாசி பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
நெடுகுன்றம் செட்டில்மெண்ட் பகுதியில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து வாழும் 90 வயதான கணேசன் என்பவர் அவரது தந்தை தாத்தா போன்றவர்கள் வாழ்ந்த இந்த பகுதியில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆங்கிலேயர்கள் காட்டு வழியில் குதிரையில் வழியில் நடந்து செல்லும் குதிரை பாதை வழியாகப் பொள்ளாச்சி பகுதிக்குச் செல்லும் பொழுது நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் இப்பகுதியில் ஆதிவாசி பழங்குடி மக்களிடத்தில் அவர்கள் வாழும் இடத்தில் தங்கியிருந்து அவர்களிடம் வனப்பகுதியில் இருக்கும்.
கிழங்கு தேன் போன்ற உணவு பொருள்களை வாங்கி செல்வார்கள். அப்போது குழந்தைகள் அனைவரும் அவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து இருப்போம், என்றும் கணேசன் அவர்கள் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துக் கண்ணீர்விட்டுத் தெரிவித்தார்.
தற்போது சுதந்திரம் அடைந்து நாம் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த வனப்பகுதியில் நான்கு ஐந்து தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். இந்த தலைமுறையில் நம் மக்கள் பட்டப்படிப்புகள் பெற்றோம்.
அனைவரும் படித்து வருகின்றனர். இதை முன்னேறிச் செல்வதே நமது சுதந்திரம் என்று சுதந்திர தினத்தில் தெரிவித்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வனப்பகுதியில் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மூப்பன் ரத்தின சாமி ரவி, முன்னாள் மூப்பான் கணேசன், பிரகாஷ் சக்திவேல், சுப்பிரமணி மற்றும் ஆதிவாசி பழங்குடியினர் பலர் கலந்து கொண்டனர்.