வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்‌ செய்திருப்பது தமிழக வரலாற்றில்‌ ஒரு மைல்கல்-தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம்.!!

கோவை: தமிழகத்தின்‌ முதல்‌ வேளாண்துறை நிதிநிலை அறிக்கை குறித்து தென்னிந்தியப் பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம்‌ (சீமா) தலைவர்‌.கே.வி.கார்த்திக்‌‌, வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி.


கோவை: தமிழகத்தின்‌ முதல்‌ வேளாண்துறை நிதிநிலை அறிக்கை குறித்து தென்னிந்தியப் பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம்‌ (சீமா) தலைவர்‌.கே.வி.கார்த்திக்‌‌, வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌‌, தமிழக வேளாண்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌,‌ தமிழ்நாட்டின்‌ முதல்‌ வேளாண்‌ நிதிநிலை அறிக்கை தாக்கல்‌ செய்ததிற்கு பம்புசெட்டு உற்பத்தியாளர்களின்‌ சங்கமான தென்னிந்தியப் பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம்‌, 'சீமா வின்‌ நல்வாழ்த்துக்கள்‌.

வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்‌ செய்திருப்பது தமிழக வரலாற்றில்‌ ஒரு மைல்கல்‌.

விவசாயம்‌ சார்ந்த நாடு, நம்‌ நாடு, நாட்டின்‌ 60-சதவிகித மக்கள்‌ வேளாண்‌ துறையைச் சார்ந்து வாழ்கின்றனர்‌. இக்காரணங்களினால்‌ வேளாண்‌ துறைக்காகத் தனி நிதிநிலை தமிழக மக்களின்‌ நீண்ட நாள்‌ எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை செவ்வனே பூர்த்தி செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில்‌ உள்ள அனைத்து அறிவிப்புகள்‌ மிகவும்‌ போற்றதக்கவை குறிப்பாக.

1. 2500-கிராமங்களில்‌ நீராதாரங்களை உருவாக்கி சாகுபடி பரப்பினை உயர்த்துவதற்காக 250 கோடி ஒதுக்கீடு, இதனால்‌ பல நூறு ஏக்கர்‌ தரிசு நிலங்கள்‌ விளை நிலங்களாக மாறும்‌.

2. சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கென ரூபாய்‌ 114.64 கோடி, ஒதுக்கியிருப்பது மின்‌இணைப்பு வேண்டிக் காத்திருக்கும்‌ மற்றும்‌ மின்தடங்கள்‌ கொண்டு செல்ல முடியாத உட்பகுதிகளில்‌ உள்ள விவசாயப்பெருமக்கள்‌ பயன்‌அடைவர்‌. சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கான மானியம்‌ என்பது பலரின்‌ நீண்ட நாள்‌ எதிர்பார்ப்பு. இத்‌ திட்டம்‌ பெரும்‌ வெற்றி பெறும்‌.

3. 1000 குறு விவசாயிகளுக்கு மின்மோட்டார்‌ பம்ப்செட்டு வாங்க ரூபாய்‌ 10,000 மானியம்‌ வழங்குவது மிகவும்‌ வரவேற்கத்தக்கது.

4. நீர்‌ மேலாண்மை ஓஎக்குவிக்கும்‌ விதமாக 500 பண்ணைக்‌ குட்டைகள்‌ அமைக்க ரூபாய்‌ 5 கோடி, ஒதுக்கீடு செய்திருப்பதினால்‌ இத்திட்டத்தினால்‌ நிலத்தடி நீர்மட்டம்‌ உயரும்‌. மேலும்‌ இத்திட்டத்தில்‌ அரசுடன்‌ கூட்டாகப் பங்குபெறப் பல பம்புசெட்டு தயாரிப்பு நிறுவனங்கள்‌ தயாராக உள்ளன என்பதைத் தெரிவித்துக்‌ கொள்கின்றோம்‌.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...