வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ். ராஜா தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சுரேஷ்குமார் தேசிய கொடியேற்றவைத்து மரியாதை செலுத்திய பின் நகரிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உள்படப் பலர் பங்கேற்று இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் இன்று காலை ஒன்பது மணிக்குத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதைப்போல் வால்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.