கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம்.!! 16-மாதங்களில் ரூ.5-கோடியே 58-லட்சம் அபராதம் வசூல்.!!

கோவை: கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


கோவை: கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாபரவல் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அரசினுடைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா விதி மீறல் தொடர்பாகப் பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து 16-மாதங்களில் ரூ.5.58-கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500-முதல் ரூ.2,000-வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத மக்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களிடம் இருந்து ரூ.5.58-கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகளுக்குச் சீல் வைக்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 16-மாதங்களில் ரூ.5-கோடியே 58-லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...