திருப்பூரில் சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் பெரியார் அண்ணா சிலைக்கு மனு.!!

திருப்பூர்: ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்டக் கோரி திருப்பூரில் சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் பெரியார் அண்ணா சிலைக்கு மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்டக் கோரி திருப்பூரில் சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் பெரியார் அண்ணா சிலைக்கு மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணா பெரியார் சிலைக்குச் சமூகநீதி கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அதில் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சி செய்த எந்தவொரு அரசும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிவரும் இட ஒதுக்கீடான 20 சதவீதத்துக்குள் உள் ஒதுக்கீடே செய்யாத நிலையில், முந்தைய அதிமுக அரசால் துரிதகதியில் இயற்றப்பட்டு, தற்போதைய திமுக அரசால் மீண்டும் ஆணையிடப்பட்டு கல்வித்துறை சேர்க்கையில் தற்போது சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வகுப்பு வாரி இட ஒதுக்கீடு என்பதைப் புறந்தள்ளி, ஜாதிவாரி இட ஒதுக்கீடு செய்திருப்பதும் அரசியலைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என, முறையீடு செய்து உள் ஒதுக்கீடு இல்லாத எம்பிசி 20 சதவீதத்தை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை தொடர வேண்டும் எனக் கோரி சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் அண்ணா சிலை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...