ஊடக தர்மத்தை விலைக்கு விற்க முயன்ற நிருபரை கைது செய்ய வேண்டும் - கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

கோவை: கோவை அன்னூரில் சாதிய பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற நிருபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.


கோவை: கோவை அன்னூரில் சாதிய பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற நிருபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர்பாளையம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் பணியாற்றி வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துசாமி என்ற உதவியாளரை, கோபால்சாமி என்பவர் தனது காலில் விழ வைத்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வேகமாக பரவியது.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் சாதிய வன்கொடுமை என்ற வகையில் அதனை ஊடகங்களும், பத்திரிகைகளும் பதிவு செய்தன. சமூக இயக்கங்களும் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை நடத்தியிருந்தார்.

பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் பெரும் திருப்பமாக, தனது நிலத்தின் பட்டாவை முறைகேடாக மாற்றம் செய்தது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோரிடம் விசாரிக்க சென்ற போது, அவதூறான வார்த்தைகளால் பேசி, கோபால்சாமியை முத்துசாமி தாக்கியதும், அதன் பின்னர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல் செயல்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதே சமயத்தில், இரண்டு வீடியோ எடுத்து, அதில் பிரச்சினைக்குரிய ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டுவிட்டு, மற்றொரு வீடியோவை வைத்து நிருபர் ஒருவர் பணம் பறிக்க முயன்ற தகவல் பத்திரிகைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஊடக தர்மத்திற்கு எதிரான இந்த செயல்பாடு மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த செயலை கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடுமையாக கண்டிப்பதோடு, இந்த செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நிருபர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் மன்றம் வலியுறுத்துகிறது.

24 மணி நேர செய்தி வேட்கையில், சம்பவத்தின் முழு பின்னணி குறித்து ஆராயாமல் செய்தி வெளியிட்ட வகையில், இது நிச்சயமாக ஊடகத்துறையினர் மீண்டும் ஒரு முறை செய்திகளின் பின்புலன்களை ஆராய வேண்டிய அவசியத்தையும், கட்டாயத்தையும் உணர்த்தியிருக்கிறது.

மக்கள் நலன் சார்ந்து இயங்கும் சமூக இயக்கங்களும் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டுவிட்டனவோ என்ற கருத்தை புறந்தள்ளி விடமுடியாது. இந்த படிப்பினைகளை மனதில் கொண்டு ஊடகவியலாளர்கள் அடுத்து வரும் செய்திகளை கவனமாக கையாள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வைத்திருக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஊடகத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...