கோவை: கோவையில் கடைத்தெரு பகுதிகளில் அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக 20 பறக்கும் படை குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் கடைத்தெரு பகுதிகளில் அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக 20 பறக்கும் படை குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் போன்ற பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடைத்தெரு பகுதிகளில் கடைகளின் உரிமையாளர்களிடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே கடைகளை திறக்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதித்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட பகுதிகளில் கடைகளை முழுவதுமாக அடைத்தல், மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி கடைகளை திறப்பது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடைத்தெரு பகுதிகளில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சுழற்சி முறையில் தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். மாலை 5 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் இரவு நேர ரோந்து பணியிலும் இந்த குழுக்கள் ஈடுபடும்.
மேலும், பறக்கும் படை அதிகாரிகள் கடைகளில் உள்ள உரிமையாளர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். தொழிலாளர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள். விதிகளை மீறுவோர்களிடம் அபராதம் விதிக்கப்படும்,' என்று தெரிவித்தார்.