கோவை மேட்டுப்பாளையத்தில் பிரபல ரவுடியை திட்டமிட்டு கொலை செய்ய ஆயுதங்களுடன் பாய்ந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா பகுதியில் பிரபல ரவுடி ஒருவனைக் கொலை செய்ய கத்தி அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் வந்த வாலிபர்களை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


கோவை: மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா பகுதியில் பிரபல ரவுடி ஒருவனைக் கொலை செய்ய கத்தி அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் வந்த வாலிபர்களை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் பிளேக் பாபு. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அண்மையில் இவருடன் சிலர் கூட்டு சேர்ந்துள்ளனர்.

அதில் ஒருவர், சிறுமுகை காமராஜ் நகரை சேர்ந்த குட்டி என்பவர். இந்த நிலையில், பிளேக் பாபுவின் கூட்டத்தில் உள்ளவர்கள் திடீரென பிளேக் பாபுவை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி அதனை அரங்கேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோத செயல்களை செய்ய

பிளேக் பாபுவுக்கு உறுதுணையாக இருந்து வந்தவர்களே, கொலை செய்த முயற்சி செய்துள்ளனர்.

அதன்படி, குட்டி தலைமையில்அறிவொளி நகரை சேர்ந்தவர் அபு (23), ஆலாங்கொம்பு காரமடை சாலை பகுதியை சேர்ந்தகார்த்திக் (23), காரமடை சேரன்நகர் 2 பகுதியை சேர்ந்த அன்சர் (21), மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை குமரபுரத்தை சேர்ந்த17 வயதான ஒருவர், மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்த சஜீர் (20), சிறுமுகை பகுதியைசுள்ளான் (எ) சுபாஸ் (23) ஆகிய 7 பேர் சேர்ந்து சிறுமுகை அருகிலுள்ள பெத்திக்குட்டை பகுதியிலுள்ள உணவகத்திற்கு பிளேக் பாபுவை மது குடிக்க அழைத்துள்ளனர்.

இதையடுத்து பிளாக் பாபு தனது நண்பரான பெரியகள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்த் (25) என்பவருடன் சேர்ந்து சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு வந்துள்ளார். அப்போது, ஏற்கனவே திட்டமிட்டிருந்த மேற்கண்ட 7 பேரும் மறைத்து வைத்திருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் திடீரென பிளாக் பாபுவை தாக்க முயற்சித்துள்ளனர். இதில், சுதாரித்து கொண்ட பிளாக் பாபு சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து சிறுமுகை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையடுத்து, பிளாக் பாபு, ஆனந்த் ஆகிய இருவரும் சேர்ந்த சிறுமுகை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரையும் சிறுமுகை காவல் ஆய்வாளர் தவமணி, தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் சட்ட விரோத தொழில் போட்டியில் பிளேக் பாபுவை கொண்று விட திட்டம் தீட்டியது தெரியவந்தது. பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெத்திக்குட்டை பகுதியில் எந்நேரமும் பொதுமக்கள் நடமாடி வரும் நிலையில், பட்ட பகலில் ஆயுதங்களுடன் கொலை முயற்சிநடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...