கோவையில் இன்று வ.உ.சி மைதானத்தில் போலீசாரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
கோவை: கோவையில் இன்று வ.உ.சி மைதானத்தில் போலீசாரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள வ. உ. சி.மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன்தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
அதைத் தொடர்ந்து, வீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்லூரி மாணவ மாணவர்களுடைய தேசப்பற்று பாடல்களுக்கு நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு, கலெக்டர் பதக்கங்கள் வழங்கி பாராட்டு சான்றிதழ்களும் வழங்க உள்ளார்.

இதையொட்டி, இன்று காலை கோவை வ.உ.சி. மைதானத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தங்களுடைய அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டன. இதில் 300 -க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.