எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் அறிக்கை..! இது தான் பிரதமர் மோடி உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஊழல் ஒழிப்பா? - அறப்போர் இயக்கம் கேள்வி

கோவை: கடந்த செவ்வாய்கிழமை, அன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். சோதனையில், பல்வேறு விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


கோவை: கடந்த செவ்வாய்கிழமை, அன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். சோதனையில், பல்வேறு விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குத் தொடர்ந்த அறப்போர் இயக்கம், முகநூல் பக்கத்தில் வானதி சீனிவாசனுக்கு காட்டமான பதில் அளித்து விளக்கத்துடன் பதிவிட்டுள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு விளக்கம் அளித்து அவர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் MLA அவர்கள் கொடுத்துள்ள அறிக்கை ஊழலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் 2018ம் வருடம் DVACல் புகார் கொடுத்து பிறகு அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து தற்பொழுது ரெய்டு நடத்தப்பட்டு வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது FIR பதியப்பட்டுள்ளது.

ஆனால், வானதி சீனிவாசன் யாரோ ஏற்பாடு செய்து, யாரோ புகார் கொடுத்ததாக அறிக்கை கொடுத்து இருக்கிறார். அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த FIR போடப்பட்டுள்ளது, என்று அனைத்து செய்திகளிலும் வந்த பிறகும், இவர் யாரை திருப்திப்படுத்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?

அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றமே ஒப்புக்கொண்ட பிறகு வானதி சீனிவாசன் எந்த அடிப்படையில், இந்த புகாரை கொச்சைபடுத்தி பேசுகிறார்? இது தான் பிரதமர் மோடி உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஊழல் ஒழிப்பா?



அப்படி, இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் பொய் என்று உங்களுக்கு தெரிந்தால் வாங்களேன், இது குறித்து ஒரு விவாதம் செய்யலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா வானதி சீனிவாசன்? இவ்வாறு அவர்கள் வானதி சீனிவாசனுக்கு சவால்விட்டு பதில் பதிவு வெளியிட்டுள்ளன.

இது குறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்களிடம் கருத்து கேட்பதற்காக, கைபேபேசியில் தொடர்புகொண்டோம். அவர் கைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...