கோவை: ரேஷன் கடைகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கைரேகை பதிவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கருவி மூலம் கைரேகை பெறப்பட்டு அதன் பின் வழங்கப்படுகிறது. தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கைரேகை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரிடையாக ரேஷன் கடைக்கு சென்றால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,419 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவி மூலம் கைரேகை பதிவு செய்யும் பணிகள் நடந்து முடிந்தது. அதன் பின் தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஒவ்வொரு முறையும் கைரேகை பதிவு பெறப்பட்டது.
இந்த கருவிகளில் இணையதள வேகம் குறைவாக உள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறும் அடிக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பொதுமக்களின் கைரேகையைப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளுக்குச் சென்றுவிட்டு பொருட்கள் வாங்காமல் மக்கள் வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் ஊழியர்களும் பாதிப்படைகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த புதிய திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்றால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கோளாறு குறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும்,'' என்றார்.