மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவு.!!

கோவை: கோவை மதுக்காரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்படத் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை செய்த அதே நாளில் கோவை மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவர் வேலுமணியின் உறவினரா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணையைத் துவக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நாளில் மதுக்கரை சார்–பதிவாளர் அலுவலகத்தில், ஒரே நபரின் பெயரில் 29-பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல், சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் நிறுவன அலுவலகங்களில், நேற்று முன்தினம் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 13 லட்சம் ரூபாய் ரொக்கம், சில ஆவணங்கள், போன்றவற்றை காவல்துறை கைப்பற்றிச் சென்றுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

வேலுமணியின் உறவினர் மகாலிங்கம் என்பவர் பெயரில், ரெய்டு நடந்த நாளான நேற்று முன்தினம் ஆகஸ்ட் 10-ம் தேதி, மதுக்கரை சார்–பதிவாளர் அலுவலகத்தில், 29-பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு பத்திரங்கள் பிழை திருத்தப்பட்டுள்ளன என, சமூக வலைத்தளத்தில் சிலர் தகவல் பதிவிட்டு இருந்தனர்.

மதுக்கரை சார்–பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, மகாலிங்கம் என்பவர் பெயரில் திருமலையாம் பாளையத்தில் உள்ள 29-மனையிடங்கள், அன்று ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டது உண்மை தான்.

ஒவ்வொரு மனையும் 3-அல்லது 4-சென்ட் அளவே இருக்கும். அதன் சந்தை மதிப்பும் மொத்தமாகச் சேர்த்தே 2-கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்றனர்.

ஆனால், பிழை திருத்தப்பட்ட நான்கு பத்திரங்களுக்கும், மகாலிங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தகவல் தெரிவித்தனர்.

மகாலிங்கம் என்பவர், வேலுமணியின் உறவினரா? இருவருக்குமான தொடர்பு என்ன, மகாலிங்கத்தின் வருவாய் பின்புலம் என்ன என்பது பற்றி, லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையும் விசாரணை மேற்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...