கேரளாவுக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி - போடிமெட்டு சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்!

கோவை: தேனி மாவட்டம் எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று கெடுபிடி நீடிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.



கோவை: தேனி மாவட்டம் எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று கெடுபிடி நீடிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதால் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியோர் அம்மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமிழி ஆகிய 3 வழித்தடங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் கேரளாவின் இடுக்கி மாவட்டம் சென்று வேலை பார்த்து மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறையினருக்கு கடுமையான கெடுபிடி செய்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கு அனுமதி மறுத்தனர்.

இதனால் போடிமெட்டு மலைச்சாலை அடிவாரத்தில் உள்ள முந்தைய சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இரண்டு மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...