வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

வால்பாறைக்கு உட்பட்ட சின்கோனா, சிறுகுன்றா, நல்லமுடி, பன்னிமேடு மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகள், பள்ளிக்கூடம், சத்துணவுக்கூடம், ரேஷன்கடை, மளிகைக்கடை, டீ கடை ஆகியவற்றை இரவு நேரங்களில் இடிப்பதும், பொருட்களை சேதப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. 



சிலசமயங்களில் பகல் நேரங்களிலேயே காட்டுயானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்துவிடும். இந்நிலையில் நேற்று கேரளா எல்லைப் பகுதியில் உள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டன.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்றும் யானைகளை இடையூறு செய்ய வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...