கோவையில் 4,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல்..! ஆய்வுக்காக பொள்ளாச்சி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு!

கோவை: கோவையில் டேங்கர் லாரியில் வைத்திருந்த 4,000 லிட்டர் பயோ டீசலை பறிமுதல் செய்யப்பட்டு பொள்ளாச்சி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவையில் டேங்கர் லாரியில் வைத்திருந்த 4,000 லிட்டர் பயோ டீசலை பறிமுதல் செய்யப்பட்டு பொள்ளாச்சி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் பயோ டீசல் கடத்தி வந்து முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, கந்தன்சாவடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு டேங்கர் லாரி மற்றும் ஒரு மினி லாரியில் பயோ டீசல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சேர்ந்த சபாபதி, செல்வ கருப்பையா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், டேங்கர் லாரியில் வைத்திருந்த 4,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பயோ டீசல் மேல் விசாரணைக்காக பொள்ளாச்சி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில், பயோ டீசல் தொழில் நிறுவனங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். டீசலை விட 15 ரூபாய் விலை குறைவாக இருப்பதால் இதை மும்பையிலிருந்து டேங்கர் லாரியில் முறைகேடாக கடத்தி வந்து லாரிகளின் இயக்கத்திற்கு பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 20,000 லிட்டர் அளவுக்கு பயோ டீசல் கடத்தி வந்து உள்ளனர். இதில் பயோ டீசலை இவர்கள் உபயோகம் செய்திருப்பதாக தெரிகிறது.

தாவர மற்றும் விலங்குகளின் கொழுப்பு பொருள்களையும் ஆல்கஹால் மற்றும் பல்வேறு வேதிப் பொருட்களையும் வைத்து பயோ டீசல் தயார் செய்யப்படுகிறது.

இதேபோல, கோவையில் பயோ டீசல் பயன்பாடு இருக்கிறதா ?… பயோ டீசல் வேறு ஏதாவது செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...