வால்பாறை நகராட்சி ஆணையாளர் மீது கணினி இயக்குநரைத் தாக்கியதாக காவல்துறையில் புகார்!!

கோவை: வால்பாறை நகராட்சி ஆணையாளர் மீது கணினி இயக்குநரைத் தாக்கியதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சி ஆணையாளர் மீது கணினி இயக்குநரைத் தாக்கியதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கணினி இயக்குநராக சுமிதா ஸ்ரீ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார்.

கடந்த வருடம் இரண்டு மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் 10 மாதங்களாகச் சம்பளம் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. இன்னிலையில் இன்று காலை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் சுமிதா ஸ்ரீயை அழைத்து ஒரு வருடச் சம்பளம் முழுவதும் பெற்றுக் கொண்டதாகக் கடிதம் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு சுமிதா ஸ்ரீ மறுப்பு தெரிவித்து தனது 10 மாத சம்பளப் பாக்கியை வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆணையாளர் முழு சம்பளமும் பெற்றுக் கொண்டதாகக் கடிதம் வழங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

மீண்டும் இதனை மறுத்த சுமிதா ஸ்ரீயை தகாத வார்த்தைகள் பேசி திட்டியுள்ளார். மேலும் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் அலுவலகத்தை விட்டு வெளியே போ என்று விரட்டி அடித்தனர்.

இதனால் மயக்கம் அடைந்து சுமிதா ஸ்ரீ கீழே விழுந்து விட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சுமிதா ஸ்ரீ வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



முன்னதாக உதவி காவல் ஆய்வாளர் முருகையா வால்பாறை அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு புகாரினை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...