கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெறப்படும் புகார் அடிப்படையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல் மீட்கப்படும் குழந்தைகளின் திருமண வயது வரை தொடர்ந்து சமூகநலத் துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.
மீட்கப்படுபவர்கள் ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வாரத்துக்கொருமுறை நேரில் வந்து கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த ஆண்டு 53 குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தாண்டு இதுவரை 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் ஆண்டுதோறும் தடுத்து நிறுத்தப்படும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளதே முக்கிய காரணம். தொடர்ந்து கிராமங்கள், நகர்ப்புறங்களில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம், குழந்தைகள் திருமணம் தொடர்பாக தகவல் அளிக்க வேண்டிய விவரங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.