பொள்ளாச்சியில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில் தீவிர சோதனை.!!

கோவை: பொள்ளாச்சி அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இன்று கோவையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக ஆனைமலை அருகே உள்ள காளியா புரம் கிராமத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசனின் நண்பர் எனக் கருதப்படும் திருமலை சாமி என்பவரது மளிகைக் கடை மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நேற்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது திருமலை சாமியின், சொத்து விவரங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன. காலை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலை சுமார் 7-மணிவரை நடைபெற்றது.

காளியாபுரம் கிராமத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை காரணமாக, பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...